அவள்




பிறக்கும் போது
புரியாத பல முகங்கள்
அழுதுகொள்வேன்
அணைத்துக் கொள்வாள்.....
அவள் !

தட்டித் தடவி
தவளும் போதும்
எட்டிப் பாதங்கள்
பதிக்கும் போதும்
தடக்கி வீழ்வேன்
தாங்கிக் கொள்வாள்......
அவள் !

கண்கள் விழிக்க வைத்து
கதைகள் கேட்ட போதும்
உள்ளே இருக்கையிலே
எட்டி உதைத்த போதும்
சற்றும் சலிக்காமல்-எனை
வருடி வளரவைத்தாள்......
அவள் !

காய்ச்சல் வந்து
படுக்கும் போதும்
கற்கள் முட்கள்
தைக்கும் போதும்
எனது நோயால்
தானே நோவுறுவாள்.....
அவள் !

முற்றத்து மண்ணில்
சுண்டுவிரல்- தான் - பிடித்து
''அ'' எழுதச் சொல்லித்தந்த
முதல் ஆசிரியை....
அவள் !

ஆம்.....

கண்கண்ட தெய்வம்
அவள் !
கற்பிக்கும் ஆசான்
அவள் !
பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய் அவள்..!

1 கருத்துகள்:

S.M.சபீர் said...

எதனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாத தாய் பாசம் பற்றி எழுத பட்ட கவிதை ரொம்ப அருமையான வரிகளை கொண்டது நன்றி தோழரே தொடருங்கள்

Post a Comment