“பாப்பா” வின் “வெண்பா” ப் “பா”

இது ஒரு சிறிய முயற்சியாக தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம். எனும் மூன்று இனத்தில் ஓரின எழுத்துக்களை மட்டுமே கொண்டு ஒரு பாவில் எழுதிடும் முயற்சி


முதலில் வல்லினமான கு,சு டு,து,பு,று

பற்றுதே பற்றிது பற்றிப் பிறகு
சிறகு சிறைபடப் போற்றுது -சித்துக்
குறுடு சிறப்பொடு பித்துப் பிடித்துப்
பிதற்றப் பிறப்புக் கொடிது..!



ஆசா பாசங்களானது எம்மைப் பற்றும் போது அதற்கு நாம் அடிமையாகி அதுவே நல்லதெனப் போற்றுவோம்... அதிலிருந்து விடுபடமுடியாது மூளை அம்மாயைக்குள் அமிழ்ந்து படும் துன்பத்தினால் பிறப்பானது கொடியதாகும்...




இடையினம்

ய,ர,ல,வ,ழ,ள





விழியால் வரைவாய் வழியை விரைவாய்
விழியாள் வலையாய் யலைய - விழுவாய்
யுயிராய் யெழுவாய் ரவியாய் யொளிர்வாய்
வளர்வாய் விரவியே வாழ்வு..!

விழி வழி காட்டும் பாதையில் போவாய்... பெண்ணின் வலையில் வீழ்ந்து புத்துயிர் வந்ததாய் எழுந்து சிறப்புடன் திகழ்ந்து எல்லோருடனும் இணைந்த வாழ்வு



அடுத்து மெல்லினம்

ஞ,ங,ந,ண,ம.ன.






மண்ணும் மணமும் மினமென்னும் முன்னமே
நின்னை நினைமனம் மின்னுமே - நம்மின
மனைமணி மன்னனும் மானமே மேன்மை
மனமென்னும் ஞானமும் நீ..!




நாட்டை மக்களை எண்ணுவதன் போதெல்லாம் உனதெண்ணம்தான் முன்னே வரும் நம்குடி மக்களின் மன்னன் போன்றவனும் இனமானம்மிக்கவனும் நீ!

0 கருத்துகள்:

Post a Comment