காதல் ப் “பா” (வெண்பா)
என்றாய் யெனதுயிர் நீயென்றாய் யுன்மனதைத்
தந்தாய் யெனதுதாய் போலானாய் - வந்தாய்
வழமான வாழ்வெனக்குத் தந்தாய் தனியாய்த்
தவித்திருந்த போதுதுணை நீயானாய், வென்றாய்
மனமெனதை நன்றாய் வழிநடத்திச் சென்றாய்
எனக்காக எல்லாம்தந் தாய்..!
**********************************************
காண்பாயே காலமும் கரைந்தே தொடர்கிறதே
வேண்டாத போதும் வந்திடும் - முதுமையிலும்
என்னன்பும் சேர்ந்தே தொடர்ந்திடும் முன்னையே
என்றுமெனை ஏற்பாயா நீ...?!
***********************************************
பார்வையாலும் சொல்வாய்யுன் காதலை ஊமையாய்
பாராத போதும் நினைவாவாய் -தீராத
நோய்போலவுன்னினைவால்தேய்ந்தாலும்வாழ்விக்கும்
மூலிகையாய் நெஞ்சினில் நீ..!
**********************************************
நீயே நினைவாவாய் நீங்காமல் என்னிழலாய்ச்
சேர்ந்தே தொடர்ந்து நிஜமாவாய் - வார்த்தையில்
சொல்ல முடியாத உண்மை உணர்வாய்
இருப்பாயே என்னிலென்றும் நீ...!
***********************************************
உள்வாங்கும் காற்றின் சுவாசமுன் வாசமே
கள்போலக் காதல் களிப்பூட்டும் - உள்ளேறும்
மூச்சோடும் காற்றாகிக் காதல் உயிர்ப்பூட்டும்
பேச்சோடும் மூச்சோடும் நீ.....!
***************************************************
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துகள்:
ஒவ்வொரு வெண்பாவும் அற்புதமாக இருக்கிறது..
புதுக்கவிதையாய் மட்டுமல்ல மரபுக்கவிதை வடிவிலும் அழகான கவிதைகள் உங்கள் வலைப்பூவில்..
மிக்க நன்றி வைகறை நிலா
Post a Comment