ஈரம்

குளிர் கொண்ட காற்றுரச 
துளிபோடும் கார்மேகச் 
சாரல் மழை...... ஈரம் 
மண் நனை(ந்)த்த நீர் சேர்ந்து 
வழிதேடிச் சென்று சேரும் 
பள்ளமதில் வெள்ளம்.....!  ஈரம்


மலைமேலே ஊற்றெடுத்து
தனக்கான வழியமைத்து
கடல் சேரும் நதி....  ஈரம்
தொடராய் ஆர்ப்பரித்து 
அலையாய் நுரைகொண்டு
தொடும் கரை......!  ஈரம்


வலிவந்த போதும் வழியற்ற போதும்
திரளாய் கண்முட்டி கன்னம் 
வழிந்தோடும் கண்ணீர்....... ஈரம்
உவர்த்தாலும் உதவும் கரங்கொண்டு
துடைக்கும் மனிதரிடம் இருக்கும்
உள்ளம் ......! ஈரம்


உடல் வருந்த வேலை செய்து
உழைப்பால் உயர்ந்தோரின்
உடலின் வியர்வை.... ஈரம்
ஈரம்.....
நனைக்கும் புவியை
நனைக்கும் உடலை
நனைக்கும் உயிரை...
ஈரம்.....!!!