புறக்கணிப்பு


பகல் முடித்துப் போகும்
பொழுதிடைச் சூரியனின்
அகல் துடைத்து வரும் தென்றல்
கூவும் குயிலொன்றின்
ஓசை  சுமந்துவரும் பொழுதினில்.....

(உன்)மனக் கூண்டிலிருந்து
ஒதுக்கப் பட்ட வேதனை
என் நிழலையும்
உண்டுவிட்ட இறுமாப்பில்
இருளாய் என்மீது பரவும்.!

மனந் தேடித்  தலைகீழாய்
தவம் செய்தும்
பலனொன்றும் இன்றி
வரமான மெளனங்களுடன்....


குரலிழந்த வெளவாலாய்
சிறகிருந்தும் பறப்பதற்கு
வழிதேடித் தவிக்கின்றேன்...


(நான்)மோதி வீழும் இடங்களில்
தாங்கிக் கொள்ளக்
கரமொன்று - எனக்காகக்
கிடைத்து விடக் கூடாதா..??

காத்திருப்பு..!

 எனது சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....
ஆம்..அவள்..என்னவள்....


எண்ணத்தில் தாங்காது
நினைவுகளை-தனது
வண்ணத்தில் வாட்டி...
கன்னத்தில் வடிக்கின்றாள்


ஆம்...
அவள் - காத்திருந்து
பூத்துப்போன விழிகள்.......


''கலங்காதே..கொஞ்சம் பொறு''


எத்தனை வார்த்தைகள்
எத்தனை தரம்.....


புளித்துப் போன கதை
புதிதாக என்னவுண்டு......?


விழித்துப்பார்த்தேன்
நனைந்து போன- என்
தலையணை......


ஓ....
எனது நென்சிலும்
ஈரம் உண்டு...........
எனவே
''கலங்காதே....கொஞ்சம் பொறு''

அருகாமை

.

**************************************************

**************************************************
**************************************************


**************************************************
திருவிழா


மின்சாரத் தோரணமும்
மங்கள வாத்தியமும் முளங்க
ஊரே ஒன்றாகக் கூடி
அழகாகக் காட்சிதரும் திருவிழா.!


என்றோ வைத்த நேர்த்திக்காய்
காவடியெடுத்த தந்தையரின்
தோள்களில் நன்றிக்கடனுடன்
கால்களின் ஆனந்த தாண்டவம்..!

அன்னையர்கள் பால்ச் செம்பில்
வளமான வாழ்விற்கான
நம்பிக்கை ததும்பும்...

எதையும் அறியாது
வளையல் கடை பார்த்து
கண்கசக்கும் தங்கையும்
பஞ்சுமிட்டாய் கேட்டு
அடம்பிடித்தபடி நானும்..!

எங்கள் சிணுங்கலையும்
மீறிய ஒலி பெருக்கி அறிவிப்பு
தொலைந்து விட்ட பிள்ளைகளின்
பெற்றோரைத் தேட ....

எவரின் நம்பிக்கையும்
உடைந்து விடாதபடி


அத்தனையும் பார்த்து
உலாவரும் ரதத்தில்
சற்றும் சலனமின்றி
தெய்வம் அமர்ந்திருக்கும்...!அழகுக் கவிதை..!


படம்
உன்னை நினைத்து
எழுதிப் பார்த்தேன்...
வார்த்தை வரவில்லை
இன்னும் முயன்று பார்த்தேன்...

முடிவாய் ஒரு சொல்
அது என் தேவதை !

ஆம்.....
அழகுக் கவிதை
அது உன் பெயர்தானடி!


படம்


முனகல்

ஒற்றை விரல்கள் பிடித்து
ஊரூராய் அலைந்ததுவும்
சொத்தைச் சுகத்தை விட்டு

பற்றைக் காடுகளில்

உயிர் காக்க ஓடியதும்..!


நித்தம் மழைபோல

குண்டுகள் வீழ்ந்ததுவும்

அன்னை மடி சிதைத்து

தந்தை உயிர் குடித்து-(என்னைத்)
துடி துடிக்க வைத்ததுவும்
எற்றை வரைக்கும் மறக்காது.!

இழந்த உயிர் இழந்ததுதான்
இருக்கும் உயிர் மீள

முட்கம்பி வேலிக்குள்

முகம் கிளிந்த - எதிர்கால
ஈழத்தின் முனகலின்று
எவர் காதில் கேட்கும்???