பகல் முடித்துப் போகும்
பொழுதிடைச் சூரியனின்
அகல் துடைத்து வரும் தென்றல்
கூவும் குயிலொன்றின்
ஓசை சுமந்துவரும் பொழுதினில்.....
(உன்)மனக் கூண்டிலிருந்து
ஒதுக்கப் பட்ட வேதனை
என் நிழலையும்
உண்டுவிட்ட இறுமாப்பில்
இருளாய் என்மீது பரவும்.!
மனந் தேடித் தலைகீழாய்
தவம் செய்தும்
பலனொன்றும் இன்றி
வரமான மெளனங்களுடன்....
குரலிழந்த வெளவாலாய்
சிறகிருந்தும் பறப்பதற்கு
வழிதேடித் தவிக்கின்றேன்...
(நான்)மோதி வீழும் இடங்களில்
தாங்கிக் கொள்ளக்
கரமொன்று - எனக்காகக்
கிடைத்து விடக் கூடாதா..??
8 கருத்துகள்:
"பகல் முடித்துப் போகும்
பொழுதிடைச் சூரியனின்
அகல் துடைத்து வரும் தென்றல்
கூவும் குயிலொன்றின்
ஓசை சுமந்துவரும் பொழுதினில்"
எல்லா வரிகளும் அழகென்றாலும்
குறிப்பாக இந்த வரிகள்...
நல்ல கற்பனை பாலன்..!
நண்பரே.. "சிறகுகள்"-ஐத் தொடர்ந்து எழுதலாமே..!!
உங்கள் உரைநடை நன்றாகவே இருக்கிறது!!
நானும் தோழர் அண்ணாமலை அவர்களை வழி மொழிகிறேன்... தொடர்ந்து எழுதுங்க...
நன்றி அண்ணா உங்கள் ஊக்கம் மகிழ்வினைத் தருகின்றது தொடர்ந்து எழுதுவேன்.
மிக்க நன்றி தோழி தொடர்ந்து எழுதுகின்றேன்
//(நான்)மோதி வீழும் இடங்களில்
தாங்கிக் கொள்ளக்
கரமொன்று - எனக்காகக்
கிடைத்து விடக் கூடாதா..??//
நாங்கள் இருக்கின்றோம் உங்களை தாங்கி பிடிக்க...
வரிகள் அனைத்தும் அருமை... வாழ்த்துகள்...
மிக்க நன்றி வாசன் :)
அனுபவ வரிகள் போல உள்ளது
நான்)மோதி வீழும் இடங்களில்
தாங்கிக் கொள்ளக்
கரமொன்று - எனக்காகக்
கிடைத்து விடக் கூடாதா..??
நிச்சயம் கிடைக்கும் நண்பா பொறுமை காத்தால்
Post a Comment