முனகல்

ஒற்றை விரல்கள் பிடித்து
ஊரூராய் அலைந்ததுவும்
சொத்தைச் சுகத்தை விட்டு

பற்றைக் காடுகளில்

உயிர் காக்க ஓடியதும்..!


நித்தம் மழைபோல

குண்டுகள் வீழ்ந்ததுவும்

அன்னை மடி சிதைத்து

தந்தை உயிர் குடித்து-(என்னைத்)
துடி துடிக்க வைத்ததுவும்
எற்றை வரைக்கும் மறக்காது.!

இழந்த உயிர் இழந்ததுதான்
இருக்கும் உயிர் மீள

முட்கம்பி வேலிக்குள்

முகம் கிளிந்த - எதிர்கால
ஈழத்தின் முனகலின்று
எவர் காதில் கேட்கும்???

7 கருத்துகள்:

ஆதிரா said...

அன்புள்ள பாலன்!
இந்த முனகல் மிக ஈனஸ்வரத்தில் இருந்தாலும் ஓங்கி ஒலிக்கிறது கவிதையில். இதயத்தைப் புண்ணாக்கும் ஈழத்து வலியை உணராதவர் உளரோ... கவிதை அருமை பாலன்..

பாலன் said...

மிக்க நன்றி ஆதிரா அவர்களே உங்களை இங்கும் காண்பதில் மகிழ்ச்சி

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள பாலன்,

முகம் மட்டுமே கிழிந்திருந்தாலும் வாழ்ந்திடலாம்.
உள்ளங்களும் உடல்களும் கி(அ)ழிக்கப்பட்டு...

கடலின் அலைபோல் என்றும் ஒலிக்காமல்... மழையின் ஓசைக்கு பின் தோன்றும் இயல்பான வாழ்வாய் என்று மாறும்?

நம்மக்களின் சோகம்(முனகல்) என்று தீரும்?
சுகம் (வெற்றி கோஷம்) என்று சேரும்?

பாலன் said...

விடை காணாத கேள்விகள், நன்றி வாசன்

கவிதன் said...

கேட்கும்..... அதற்கான எதிர்பார்ப்புக்களுடனும் ,பிரார்த்தனைகளுடனும்..... மனதில் தேங்கிய வலியுடன் .....

பாலன் said...

நன்றிகவிதன்

S.M.சபீர் said...

இக்கவிதை என்னை கண்கலங்க வைத்து விட்டது நண்பா

Post a Comment