♥♥♥..யாதுமானாய்.. ♥♥♥
எழுதுகின்ற எழுத்துகளில் எல்லாம்
உன்னை உள்ளடக்க முடியாது
என் எழுதாத எழுத்துகளின்
நுன் உணர்வுகளை நீ யறிவாய்....♥♥♥

உன் முகமறியும் முன்னமே 
அகமறிந்த அறிமுகம் நீ..
உனையறிந்த பின்னால்தான்
நானே எனக்கும் அறிமுக மாகினேன்..♥♥♥

புலருகின்ற என் காலைகளின்
வெளிச்சமாய் உன்முகம் காட்டி
நாம் சென்றிடும் பயணத்தின் 
திசைகளாய் நீ யாவாய்....♥♥♥

என் எண்ணத்தின் சித்திரத்தை
வண்ணமிடும் தூரிகையாய்
கொள்ளை கொண்ட உள்ளமதை
துடிக்கவைக்கும் ஜீவனுமாய் ஆனாய்...♥♥♥

பதினைந்து
 வருடத்திலென் பாதியுமாய்

ஒவ்வொரு தருணத்திலும் தாயுமாய்
சேயுமாய்த் தோழியாய்க் கூடவே
துணையுமாய் யாதுமாய் ஆனாய்....♥♥♥

எழுதுகின்ற எழுத்துக்களில் எல்லாம்
உன்னை உள்ளடக்க முடியாது...♥♥