யாரிவள்

வெண் நிறத்தாள்
நான் மாலையில்
வீடு வர
இதள் மலர்வாள்...

காற்றோடு சேர்ந்து
நான் சுவாசிக்கும்
மூச்சினில்
நறு மணமாய்
கலந்திடுவாள்....

என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....

நான் பூஜிக்கும்
தெய்வத்தின்-காலடியில்
தவமிருப்பாள்...

இன்று -என்
கல்யாண வீட்டினில்
கழுத்தினைப் பிடித்தபடி
தொங்குகின்றாள்...

ஆம் ....

இவள்-என்
வீட்டுத் தோட்டத்தில் பூத்த
மல்லிகை!!


1 கருத்துகள்:

S.M.சபீர் said...

முத்தான வரிகளை கொண்ட இக்கவிதை சூப்பர் நண்பா தொடருங்கள்

Post a Comment