பூச்சாண்டி..!

விஞ்சும் சிரிப்பினிலும்
கொவ்வையிதழ் பேச்சினிலும்
அயல் வீட்டுப் பிள்ளையென்னைக்
கொள்ளை கொண்டு போனதுண்டு!

பிஞ்சுக் கரம் பிடித்து
பஞ்சு மேனி தூக்கிக்
கொஞ்சிவிட ஆசை கொண்டு
அண்டை வீடு சென்றபோது..

அமுதைப் பிசைந்து கொண்டு
“ஆ” காட்டு என்று சொல்ல 
அடம்பிடித்த பிள்ளைக்கு ...

“அதோ பார் அடுத்த வீட்டு
மாமா வாரார் - உன்னைக்
கொண்டு போகப் போறார்”
என்றே அன்னை சொல்ல....

விக்கித்துப் போன பிள்ளை
“ஆ” வென்று வாய் திறக்க
பருக்கைகள்  திணிக்கும் போதே
வெக்கித்துப் போய் வீடு வந்தேன்!

அடுக்கடுக்காய்ப் பலப்பல
பலபேரும்  திணித்துவிட்ட
முகமூடி ஒவ்வொன்றாய் 
உரித்துரித்துப் பார்க்கின்றேன்..!

பயமாய்த்தான் இருக்கிறது- நான்
               “பூச்சாண்டி!”
8 கருத்துகள்:

வைகறை நிலா said...

யதார்த்தமான அழகான கவிதை!

S.M.சபீர் said...

யதாத்தமான ரொம்ப அழகான வரிகள் நன்றி நண்பா

பாலன் said...

மிக்க நன்றி வைகறை நிலா

பாலன் said...

மிக்க நன்றி சபீர்

அண்ணாமலை..!! said...

" நாம எல்லாப் புள்ளைகளுக்கும்
பூச்சாண்டியாதான் தெரியுவமோ..!!"

உங்க சிந்தனை அருமை பாலன்..!!

அண்ணாமலை..!! said...

"பூக்களின் வகை"க்கு மேலே "தென்றலாய்" என்று வரவேண்டுமோ..!!
(Googel friend connect-kku மேலே)
நன்றி!

பாலன் said...

மிக்க நன்றி அண்ணா, சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி மாற்றிவிட்டேன்

தஞ்சை.வாசன் said...

எங்களை ஆட்கொள்ளும் அன்பு பூச்சாண்டியாக... உங்கள் வரிகளின் வழியே எங்களை கவர்ந்து கொண்டு...

Post a Comment