காத்திருப்பு..!

 எனது சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....
ஆம்..அவள்..என்னவள்....


எண்ணத்தில் தாங்காது
நினைவுகளை-தனது
வண்ணத்தில் வாட்டி...
கன்னத்தில் வடிக்கின்றாள்


ஆம்...
அவள் - காத்திருந்து
பூத்துப்போன விழிகள்.......


''கலங்காதே..கொஞ்சம் பொறு''


எத்தனை வார்த்தைகள்
எத்தனை தரம்.....


புளித்துப் போன கதை
புதிதாக என்னவுண்டு......?


விழித்துப்பார்த்தேன்
நனைந்து போன- என்
தலையணை......


ஓ....
எனது நென்சிலும்
ஈரம் உண்டு...........
எனவே
''கலங்காதே....கொஞ்சம் பொறு''

8 கருத்துகள்:

அண்ணாமலை..!! said...

கலங்காதிரு மனமே..- உன்
கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!
(..கண்ணதாசன்!)
பாலன் உங்கள் படைப்பும்,
அதற்கான படமும் நன்று!

பாலன் said...

மிக்க நன்றி அண்ணா

தோழி said...

''கலங்காதே....கொஞ்சம் பொறு''.. நல்லா இருக்குங்க... தொடருங்க...

பாலன் said...

மிக்க நன்றி தோழி

அன்புடன் மலிக்கா said...

ஓ....
எனது நென்சிலும்
ஈரம் உண்டு...........
எனவே
''கலங்காதே....கொஞ்சம் பொறு'' //

சூப்பர் நல்ல கவிதை நயம் மிக சிறப்பாக உள்ளது..

தொடர்ந்து எழுதுங்கள் சிறப்புகள் சேரட்டும்..

http://niroodai.blogspot.com/

http://fmalikka.blogspot.com/

http://kalaisaral.blogspot.com/

அன்புடன் மலிக்கா

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

அன்புள்ள பாலன்,

\\எண்ணத்தில் தாங்காது
நினைவுகளை-தனது
வண்ணத்தில் வாட்டி...
கன்னத்தில் வடிக்கின்றாள்\\

காதலும், காத்திருத்தலும் அருமை...

பாலன் said...

நன்றி மல்லிகா
நன்றி வாசன்

S.M.சபீர் said...

பொறுமை படுத்தும் உங்கள் கவிதை அருமை நண்பா

Post a Comment