திருந்தாத (து) மனது!




திரைகளில் போட்டிடும்
படங்கள் கதையென
உள்ளம் அறியும் - இருந்தும்
கதையினில் வருகின்ற
காட்சிகள் கண்டே.....
கன்னத்தில் ஈரம் வடியும் !

இதுபோல்...
வாழ்வினில் ஆடிடும் ஆட்டம்
அதற்காய் போட்டிடும் வேஷம்.....

நாடகமென்றே
உள்ளம் உணர்ந்தும் -பின்
மனதினில் திரைகள் மூடும்
இருந்தும்
உள்ளே இருந்தொரு மிருகம்
மெல்ல விலக்கிப் பார்க்கும்...

விழிகளின் திரைகள்
மூடும் - இருந்தும்
விழிகளில் கரைகளை
உடைத்தே வெள்ளம் ஓடும்....!!


4 கருத்துகள்:

தேவன் மாயம் said...

விழிகளின் திரைகள்
மூடும் - இருந்தும்
விழிகளில் கரைகளை
உடைத்தே வெள்ளம் ஓடும்....!!
///
கவிதை அருமை!!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான கவிதை பாலன்
அப்படியே நம்ம சைட்க்கு வந்து
நம்ம கவிதையையும் பாக்கறது

Unknown said...

//கவிதை அருமை!!//

மிக்க நன்றி நண்பரே

Unknown said...

//அருமையான கவிதை பாலன்
அப்படியே நம்ம சைட்க்கு வந்து
நம்ம கவிதையையும் பாக்கறது//

நன்றி மணிசார்,இதோ இப்போதே பார்க்கின்றேன்

Post a Comment