திருவிழா






மின்சாரத் தோரணமும்
மங்கள வாத்தியமும் முளங்க
ஊரே ஒன்றாகக் கூடி
அழகாகக் காட்சிதரும் திருவிழா.!


என்றோ வைத்த நேர்த்திக்காய்
காவடியெடுத்த தந்தையரின்
தோள்களில் நன்றிக்கடனுடன்
கால்களின் ஆனந்த தாண்டவம்..!

அன்னையர்கள் பால்ச் செம்பில்
வளமான வாழ்விற்கான
நம்பிக்கை ததும்பும்...

எதையும் அறியாது
வளையல் கடை பார்த்து
கண்கசக்கும் தங்கையும்
பஞ்சுமிட்டாய் கேட்டு
அடம்பிடித்தபடி நானும்..!

எங்கள் சிணுங்கலையும்
மீறிய ஒலி பெருக்கி அறிவிப்பு
தொலைந்து விட்ட பிள்ளைகளின்
பெற்றோரைத் தேட ....

எவரின் நம்பிக்கையும்
உடைந்து விடாதபடி


அத்தனையும் பார்த்து
உலாவரும் ரதத்தில்
சற்றும் சலனமின்றி
தெய்வம் அமர்ந்திருக்கும்...!







9 கருத்துகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

சலனமின்றி இருந்தாலும்
மனதில் தோன்றும் சஞ்சலங்களை
தீர்க்கும் என்ற நம்பிக்கையுடன் நாம்...

திருவிழாவை நேரில் கண்ட உணர்வு மகிழ்வு மனதில்....

அண்ணாமலை..!! said...

அதே! அதே! எனக்கும் அதே!
திருவிழாவை மீண்டும் தீண்டி விட்டு
வந்தன எண்ணங்கள்.!
அருமை பாலன் !

தோழி said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் அனைத்தும் வளமானதாகவும் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

Unknown said...

///சலனமின்றி இருந்தாலும்
மனதில் தோன்றும் சஞ்சலங்களை
தீர்க்கும் என்ற நம்பிக்கையுடன் நாம்...

திருவிழாவை நேரில் கண்ட உணர்வு மகிழ்வு மனதில்///

நன்றி வாசன்

Unknown said...

///அதே! அதே! எனக்கும் அதே!
திருவிழாவை மீண்டும் தீண்டி விட்டு
வந்தன எண்ணங்கள்.!
அருமை பாலன் !///

நன்றி அண்ணா

Unknown said...

///இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இனிவரும் நாட்கள் அனைத்தும் வளமானதாகவும் உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்///

மிக்க நன்றி தர்ஷி,தங்களைக் காண்பது மனதில் மகிழ்ச்சியைத் தந்தது :) தங்களிற்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள், தாங்கள் நலமுடன் இருக்க என்றும் என் வேண்டுதல்கள் இருக்கும்.

வைகறை நிலா said...

கோவில் திருவிழாவை - நேரில் பார்ப்பதுபோல் இனிமையாய் இருக்கிறது..இந்த கவிதையும்..

கவிதன் said...

திருவிழாக்கால நினைவுகள் வந்து போகின்றன..... நல்ல படைப்பு!

வாழ்த்துக்கள் கௌரிபாலன்!

Unknown said...

நன்றி வைகறை நிலா,
நன்றி கவிதன்.

Post a Comment