பற்றும் கொடி..!நெடுந் துயர் வளர்ந்திடும் மரமும்
விழுதெனப் படர் பெரு விருட்சமும்
விழும் திசைக் காற்றினில் தலையசை
செடியுடன் நிலம் படர்ந்தொரு கொடியென்
வீட்டுக் கொல்லையில்...!


பிடி மண் மீதொரு பிடிப்பின்றி
அலைந்திடும் கொடியது அணைப்பினில்
நெடுந்துயர் மரமது கனிந்தது
இனியதன் வாழ்வும் இனிதெனக்
கொடியதன் அணைப்பினில் கொண்டது..!


கொடிவேர் மரமதில் பற்றிடப்
பிடியதன் வாயினில் கரும்பென
கொடுமையாய் ஆனது மரமும்
கொழு கொம்பெனப் போனது..!

பிடிப்புடன் பற்றிடும் யாவும்
உற்ற நல் பற்றல்ல
பிடிப்பது பிணிதரும் போதினில்
பாரற்றுப் போய்விடும் மரமும்..!
மனமும்...!

3 கருத்துகள்:

Priya said...

//பிடி மண் மீதொரு பிடிப்பின்றி
அலைந்திடும் கொடியது அணைப்பினில்
நெடுந்துயர் மரமது கனிந்தது
இனியதன் வாழ்வும் இனிதெனக்
கொடியதன் அணைப்பினில் கொண்டது..!//... அழகான வரிகள்!

பாலன் said...

நன்றி ப்ரியா

தஞ்சை.வாசன் said...

நல்ல கருத்தும், ஆழமும் நிறைந்த வரிகள்...

மனமும்... மரமும்...

வாழ்த்துகள்....

Post a Comment