**************************
எங்கும் வாழும் அன்பே மூச்சாய்
துன்பம் தன்னை என்றும் தாங்கும்
நெஞ்சம் ஏற்கும் நட்பு..!
************************
வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சை
என்றும் உள்ளத் தேந்து..!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்..!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அலைகொண்டு வரும்நுரையும் கரைந்தோடும் கலையாமல்
கரைமீது மலைபோல உனதெண்ணம் நிலையாகும்
தளர்ந்தாலும் மறையாதுன் இருப்பு...!
......................................................
தருந்தமிழ் இனிதெனச் சுவைத்திட வரும்கவி
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று!
<<<<<<<<<<<<<<<<பாவிலக்கணம் சொல்லித் தந்த தோழி சூரியாவிற்கும் தமிழ நம்பி அவர்களிற்கும் நன்றி>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துகள்:
அனைத்தும் அருமை.
//சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்..!//.... இது ரொம்ப பிடிச்சிருக்கு.
மிக்க நன்றி ப்ரியா
Post a Comment