சாரல்
அலையும் முகிலினங்கள்
கறுத்த தென்ன மாயம்
அகிலம் நனைய அழுகிறதே...
பாவம்!
கொஞ்சி விளையாடிய
நிலவை இழந்ததால்
வந்த சோகம் சாரலா..?
கிள்ளை போன்ற பல
வெள்ளி தொலைந்ததால்
கொண்டதிந்தச் சாரலா..?
கடல் அன்னை மீதுள்ள
அன்பைச் சொல்லும்
மொழிதான் இச் சாரலா...?
அண்டப் பெரு வெளியிருந்தும்
அலையும் நிலை தமக்கேயென
எண்ணி அழுவதே யிச் சாரலா..?
கார்முகிலைப் பெண்ணின் கூந்தலிற்கு
உவமை சொன்னதால் -முகில்கள்
கொண்ட கோபமே யிச் சாரலா..? :)
சிவனின் முடியிருந்து பாயும்
கங்கை நதி - நிலத்தில்
வீழ்வதே யிச் சாரலா...?
அலையும் முகிலினங்கள்
கறுத்த தென்ன மாயம்
அகிலம் நனைய அழுகிறதே... பாவம்!
உலகம் உயிர் பெறவே
தன்னைக் கரைக்கிறதே மேகம்..!
எம்மைக் கரைத்திங்கு
உலகிற்கேது செய்தோம்..? எனும்
எண்ணம் பிறக்கின்றதே யிச் சாரலால்...!
அலையும் முகிலினங்கள்
கறுத்த தென்ன மாயம்
அகிலம் நனைய அழுகிறதே...
பாவம்!
கொஞ்சி விளையாடிய
நிலவை இழந்ததால்
வந்த சோகம் சாரலா..?
கிள்ளை போன்ற பல
வெள்ளி தொலைந்ததால்
கொண்டதிந்தச் சாரலா..?
கடல் அன்னை மீதுள்ள
அன்பைச் சொல்லும்
மொழிதான் இச் சாரலா...?
அண்டப் பெரு வெளியிருந்தும்
அலையும் நிலை தமக்கேயென
எண்ணி அழுவதே யிச் சாரலா..?
கார்முகிலைப் பெண்ணின் கூந்தலிற்கு
உவமை சொன்னதால் -முகில்கள்
கொண்ட கோபமே யிச் சாரலா..? :)
சிவனின் முடியிருந்து பாயும்
கங்கை நதி - நிலத்தில்
வீழ்வதே யிச் சாரலா...?
அலையும் முகிலினங்கள்
கறுத்த தென்ன மாயம்
அகிலம் நனைய அழுகிறதே... பாவம்!
உலகம் உயிர் பெறவே
தன்னைக் கரைக்கிறதே மேகம்..!
எம்மைக் கரைத்திங்கு
உலகிற்கேது செய்தோம்..? எனும்
எண்ணம் பிறக்கின்றதே யிச் சாரலால்...!
3 கருத்துகள்:
மழையின் சாரல்... உங்களின் வரிகளின் வழியே எங்கள் மீது தூறலாய்... மனதிற்கு இனிதாய்... ரசித்துக்கொண்டே இருக்கும் தருணமாய்...
மிக்க நன்றி வாசன் சாரல் பற்றிய கவிதை கேட்ட சகோதரிக்காக எழுதியது அதனை இங்கேயும் சேமித்து விட்டேன்
அப்ப எங்களுக்கு... ஒன்னும் கிடையாதா?
கேட்டால் தான் எனக்கு கொடுப்பீங்களா?
Post a Comment