அற்றைத்திங்கள் ..!


ற்றைத் திங்கள் எண்ணமெல்லாம்
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் நீ எனக்கில்லை
இதயம் எரிந்து வேகுதடி..!

கற்றை மொழிகள் எத்திசையும்
உந்தன் குரலில் ஒலிக்கிறதே
ஒற்றைச் சொல்லாய்நீ உச்சரித்த
எந்தன்பெயரும் காற்றில் அலைகிறதே...!

உற்றதெல்லாம் தொலைந்தது போல
மிச்சமுள்ள உயிரும் என்னில்
குற்றுயிராய்க் கிடக்குதிங்கே
சொச்சமுள்ள உன் நினைவினாலே...!

பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...!

வெற்றாய்ப் போன வாழ்வெனது
விருப்பாய்க் கொள்ள ஏதுள்ளது..?
கற்றதெல்லாம் உன்னையன்றி
கருத்தில் ஒன்றும் கருதிடவில்லை..!

ஒற்றைப் பாதையது உன்வாசல் மட்டும்
போகத்தெரிந்த கால்களின்று
பற்றைக்காடு மேடெங்கும் அலைந்து திரிகிறதே
கைகள் கோர்த்த வுன் கரமெங்கே...?

சுற்றம் யாவும் சூழ்ந்திருக்க
சூனிய உலகில் உன்னுடன் நானே
மற்றோர் சிரிப்பில் தெரிந்து கொண்டேன்
மன(ம்)நிலை இன்றி ஆனேனென்று..!


அற்றைத் திங்கள் எண்ணமெல்லாம் 
பித்தம் கொள்ள வைக்குதடி
இற்றைத் திங்கள் எனக்கில்லை 
இதயம் எரிந்து வேகுதடி..! 

4 கருத்துகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

உங்களின் வரிகளையும், அதற்கு ஏற்ற ஒரு படத்தையும் பார்க்கும் போது எந்தன் இதயமும் எரிந்துக்கொண்டு....

காற்றினிலே வரும் கீதமாய் அவள் குரல் - இனிமையாய்
உடலில் எஞ்சியிருக்கும் உயிருமாய் அவள் - தனிமையாய்
கற்றதும், விரும்பியதுமாய் அவள் - தாகமாய்
கண்மூடி சென்றாலும் அவள் கைபிடித்து நடந்தால் சொர்க்கமே - இதமாய்

//பெற்ற முத்தம் காயவில்லை
சொத்தைப் போல சேர்த்து வைத்தேன்
எற்றை நாளும் மாறா நினைவே (யுனை)
நித்தம் நித்தம் சுவாசிக்கின்றேனே...! //

அவளின் முத்ததிலும், அவளின் நினைவெனும் சுவாசத்திலும் மனநிலை இன்றி போனாலும் என்றென்றும் உயிர்வாழ்ந்துக்கொண்டு...

எல்லா வரிகளும் அருமையாய்... வாழ்த்துகள் நண்பரே...

Unknown said...

காதலில் எரியும் இதயத்தின் வலியை வார்த்தைகளில் வார்த்த அழகு கவிதை!! வாழ்த்துக்கள்!!

Unknown said...

ஒருமுறை வந்துப் பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!!

Unknown said...

மிக்க நன்றி சுசி,
மிக்க நன்றி வாசன் காதலில் தோற்றதாக எழுதச் சொன்னார்கள் அதனால் வந்த வரிகள் அவை :)
மிக்க நன்றி வைகறை, உங்கள் வலைப் பூவினைப் பார்வையிடுகின்றேன்... தொடர்ந்திடும் சுட்டி இருப்பின் தொடர்ந்திடுவேன்.

Post a Comment