
புவனா..திருமண நாள் நல் வாழ்த்துகள்
கிறுக்கியது
Unknown
on 27 Aug 2010
28,08,10 திருமண நாள் காணும் புவனா ஸ்வாமிநாதன் தாம்பதியினர்க்கு எனது இதயம் கனிந்த திருமண நாள் நல் வாழ்த்துகள்

நண்பர் கிரியின் பிறந்த நாள் “பா”
18.08.2010 பிறந்தநாள் காணும் அன்பின் நண்பர் கிரிக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்
காதம் பலவும் கடந்திட வேண்டுமா..?
நேசம் உணர்த்த கடல்கடந்து _ வீசிடும்
காற்றுனது காதுரசக் கேட்டேநீ பாரதனின்
கூற்றினில் சொல்லுமென் நட்பு..!
காதம் பலவும் கடந்திட வேண்டுமா..?
நேசம் உணர்த்த கடல்கடந்து _ வீசிடும்
காற்றுனது காதுரசக் கேட்டேநீ பாரதனின்
கூற்றினில் சொல்லுமென் நட்பு..!
வெண்டாழிசை
**************************
எங்கும் வாழும் அன்பே மூச்சாய்
துன்பம் தன்னை என்றும் தாங்கும்
நெஞ்சம் ஏற்கும் நட்பு..!
************************
வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சை
என்றும் உள்ளத் தேந்து..!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்..!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அலைகொண்டு வரும்நுரையும் கரைந்தோடும் கலையாமல்
கரைமீது மலைபோல உனதெண்ணம் நிலையாகும்
தளர்ந்தாலும் மறையாதுன் இருப்பு...!
......................................................
தருந்தமிழ் இனிதெனச் சுவைத்திட வரும்கவி
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று!
<<<<<<<<<<<<<<<<பாவிலக்கணம் சொல்லித் தந்த தோழி சூரியாவிற்கும் தமிழ நம்பி அவர்களிற்கும் நன்றி>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எங்கும் வாழும் அன்பே மூச்சாய்
துன்பம் தன்னை என்றும் தாங்கும்
நெஞ்சம் ஏற்கும் நட்பு..!
************************
வெந்த உள்ளம் நீவும் கைபோல்
தென்றல் போன்ற மென்மைப் பேச்சை
என்றும் உள்ளத் தேந்து..!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்
தொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு
குறுநகை புரிந்திடும் சேய்..!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அலைகொண்டு வரும்நுரையும் கரைந்தோடும் கலையாமல்
கரைமீது மலைபோல உனதெண்ணம் நிலையாகும்
தளர்ந்தாலும் மறையாதுன் இருப்பு...!
......................................................
தருந்தமிழ் இனிதெனச் சுவைத்திட வரும்கவி
அருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்
குருவினை நினைத்திடல் நன்று!
<<<<<<<<<<<<<<<<பாவிலக்கணம் சொல்லித் தந்த தோழி சூரியாவிற்கும் தமிழ நம்பி அவர்களிற்கும் நன்றி>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சாரல்
சாரல்

அலையும் முகிலினங்கள்
கறுத்த தென்ன மாயம்
அகிலம் நனைய அழுகிறதே...
பாவம்!

கொஞ்சி விளையாடிய
நிலவை இழந்ததால்
வந்த சோகம் சாரலா..?
கிள்ளை போன்ற பல
வெள்ளி தொலைந்ததால்
கொண்டதிந்தச் சாரலா..?
கடல் அன்னை மீதுள்ள
அன்பைச் சொல்லும்
மொழிதான் இச் சாரலா...?
அண்டப் பெரு வெளியிருந்தும்
அலையும் நிலை தமக்கேயென
எண்ணி அழுவதே யிச் சாரலா..?
கார்முகிலைப் பெண்ணின் கூந்தலிற்கு
உவமை சொன்னதால் -முகில்கள்
கொண்ட கோபமே யிச் சாரலா..? :)
சிவனின் முடியிருந்து பாயும்
கங்கை நதி - நிலத்தில்
வீழ்வதே யிச் சாரலா...?
அலையும் முகிலினங்கள்
கறுத்த தென்ன மாயம்
அகிலம் நனைய அழுகிறதே... பாவம்!

உலகம் உயிர் பெறவே
தன்னைக் கரைக்கிறதே மேகம்..!
எம்மைக் கரைத்திங்கு
உலகிற்கேது செய்தோம்..? எனும்
எண்ணம் பிறக்கின்றதே யிச் சாரலால்...!


அலையும் முகிலினங்கள்
கறுத்த தென்ன மாயம்
அகிலம் நனைய அழுகிறதே...
பாவம்!

கொஞ்சி விளையாடிய
நிலவை இழந்ததால்
வந்த சோகம் சாரலா..?
கிள்ளை போன்ற பல
வெள்ளி தொலைந்ததால்
கொண்டதிந்தச் சாரலா..?
கடல் அன்னை மீதுள்ள
அன்பைச் சொல்லும்
மொழிதான் இச் சாரலா...?
அண்டப் பெரு வெளியிருந்தும்
அலையும் நிலை தமக்கேயென
எண்ணி அழுவதே யிச் சாரலா..?
கார்முகிலைப் பெண்ணின் கூந்தலிற்கு
உவமை சொன்னதால் -முகில்கள்
கொண்ட கோபமே யிச் சாரலா..? :)
சிவனின் முடியிருந்து பாயும்
கங்கை நதி - நிலத்தில்
வீழ்வதே யிச் சாரலா...?
அலையும் முகிலினங்கள்
கறுத்த தென்ன மாயம்
அகிலம் நனைய அழுகிறதே... பாவம்!

உலகம் உயிர் பெறவே
தன்னைக் கரைக்கிறதே மேகம்..!
எம்மைக் கரைத்திங்கு
உலகிற்கேது செய்தோம்..? எனும்
எண்ணம் பிறக்கின்றதே யிச் சாரலால்...!

Subscribe to:
Posts (Atom)