மே 18


அழுதழுது தொழுதோம்
விழி நீரில் கரைந்தோம்
பொழுதொன்று போகையில்
விழும் உயிர்கள் பல நூறு..!

வேதனையில் விம்மினோம்
வீதிவரை கதறினோம்
காதுகொடுத்துக் கேட்போர்
மேதினியில் யாருமில்லை..!

குலைகுலையாய் கொத்துக்குண்டு
வகை தொகையாய் பொஸ்பரஸ்
வலையம் இதுதான் பாதுகாப்பென்றே
கொலையைச் செய்தார் கொடுமரசு...!

தட்டிக்கேட்பார் யாருமில்லை
தட்டிக் கொடுத்தார் இனவழிப்பை
தொட்டிப் பிள்ளையைக் கூட
விட்டு வைக்க வில்லை...!

மரணம் அன்று தமிழன் (மட்டும்)அன்று
மரணித்தது மனிதம் உலகிலென்றே
உரத்துச் சொல்லி உரிமை கேட்போம்
வரட்டும் தமிழீழம் என்றே..!






வலியுடன் சுமக்கும் நினைவில் இன்று ஒருவருடம் முடிவில்
இறுதிக்கட்டப் போரில் இழந்த மக்கள் போராட்ட வீரர்கள் அனைவரிற்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகின்றேன் அவர்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டுகின்றேன்.

10 கருத்துகள்:

SOS said...

No words to express the pain from my side.. feeling heavy.
Your lines reflects the wounded hearts beyond the fence.

Priya said...

என்ன சொல்வதென்றெ தெரியல.....வார்த்தைகள் இல்லை.

Unknown said...

கருத்திற்கு நன்றிகள் ஹேமா & ப்ரியா

அண்ணாமலை..!! said...

சொல்ல வார்த்தைகள் இல்லை
பாலன்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தங்கள் வரிகளின் வழியே என்னால் உணரமுடிந்தது அவர்களின் வேதனைகளையும் சோதனைகளையும்...

அனைவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் என்னின் வேண்டுதலையும் சமர்பிக்கின்றேன்...

என்னின் ஒர் நிமிட மெளன அஞ்சலியோடு...

அண்ணாமலை..!! said...

நண்பர் திரு.பாலன் ! நலமா?? வீட்டினரும்?
தங்களைக் காண இயலவில்லையே சிறிது
நாட்களாக?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நண்பர் நலமே... நண்பருக்கு அதிகபடியான வேலை பளுவாலும், நேர்மின்மையாலும் நம்பக்கம் வருவதில் சற்று கடினமாகின்றது... விரைவில் நம்மோடு கலந்து நம்மையும் மகிழ்விப்பார்... அவரும் மகிழ்வார்...

Unknown said...

நலன் விசாரிப்பிற்கு நன்றி அண்ணா, நலமே நாடுவதும் அதுவே. கொஞ்சம் வேலைப் பளு இருந்தது அதனால் வரமுடியவில்லை, என்னிலை தெரிவித்த வாசனிற்கும் நன்றிகள்.

அண்ணாமலை..!! said...

தங்கள் நலத்தால் கடவுளுக்கும்,
நண்பர் வாசனின் தகவலுக்கும்
மிக நன்றிகள்!

வைகறை நிலா said...

மரணித்தது மனிதம்,.
உண்மை.. பொதுநலம் உடைய மனிதர்களால் ஜீரணிக்க முடியாத உண்மை.
பாதிக்கப்பட்ட எல்லோரும் விரைவில் நலம் பெறவேண்டும்..

Post a Comment