சத்தமின்றி வார்த்தை பேசும்
அவள் புன்னகையும் பார்வைகளும்
புதுமொழியாகிட - நானோ
அதன் அகராதியாகின்றேன்...!
எரித்திடும் தீ யென - என்
அனல்மூட்டும் கோபங்கள்
அடங்கிப் போய்விடும் உன்
மெளனப் பார்வைகளால்...!
துவண்டுவிடுகின்ற நேரத்தில்
துவட்டுகின்ற துணிபோல்
என்மேல் பரவி விடுகின்றாய்
உன்னுள்ளே கசிந்து விடுகின்றேன்
நான்...!
வழியனுப்ப வாசல் வந்து
வரும் வழிபார்த்துக் காத்திருப்பாய்
நானோ...!
என் விழியோடுன்னைத்
தூக்கிச் செல்வேன்...!
8 கருத்துகள்:
//விழியொடுன்னைத்//
விழியோடுன்னை....?
http://vaarththai.wordpress.com
விழியோடுன்னை என்பதே சரி :) வரவிற்கு நன்றி
அருமை தோழரே ..
கவிதைகள் உயிரேடு வந்துள்ளன.வாழ்த்துக்கள்
அருமை..
நண்பரே! நலமா?
வெகுகாலம் கழித்துக் கவிதைகளுடன் !
"விழியொடுன்னை " என்பதும் சரியே!
நன்றிகள்!
கருத்திட்ட நண்பர்கள் அனைவரிற்கும் நன்றிகள்
அத்தனை வரிகளும் மிகவும் அருமைதோழரே அன்புபாராட்டுக்கள்
Post a Comment