பாவையாக வேண்டும்....



கிள்ளை மொழிபேசும்
கள்ளமில்லா உள்ளமதில்
தொல்லையில்லா நினைவுகள்...!

அன்னையவள் ஊட்டும் உணவும்
மடிசாய்த்துக் கதை சொன்ன கதையும்
இவள் சார்ந்த மொழிதனிலே
கிள்ளையிவள் பாவை கொள்ளும்....!

தூக்கம் வரும்போது துணையாகும்
தாக்கம் ஏதுமின்றித் தானிருக்கும்
நோக்கம் இல்லா நேசம் கொள்ள
பாசத்தோடதைப் பார்த்திடுவாள்..!

பள்ளிப் படிப்புகளும் பாடல்களும்
துள்ளும் விளையாட்டுகளும்
அள்ளிக் கொடுக்கும் அணைப்புகளும்
தோழியென்றே பாவை பெறும்....!

அல்லும் பகலும் அருகிருத்தி
அளவிலா இன்பம் பெருக்கி
கண்ணே மணியே யெனும் கொ(கெ)ஞ்சல்
எம்மில் இருந்தே தான் பெற்றாள்.....!

இருந்தும்.....

அப்பாவையாக மாட்டேனா ???
என எண்ணி ஏங்கிப் போகின்றேன்....!

9 கருத்துகள்:

சுசி said...

அழகா இருக்குங்க.

Unknown said...

கவிதையும், படமும் அருமை...!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

பொம்மைகள்(பாவை), நம் கிள்ளைகள் கொஞ்சும் பிள்ளைகள்... அப்பா என்றாலும் அப்பாவையாக மாறமாட்டேனா என்று எண்ணி ஏக்கம் அருமையாக...

குழந்தைகளை நாம்பெற்றெடுத்தாலும்.... நம் பி்ள்ளைகளுக்கு நாம் பிள்ளைகள் ஆகிப்போவதில் எத்தனை மகிழ்ச்சி... அதனை எண்ணி பார்க்கின்றபோதே என் மனமும் ஏங்கி தவிக்கிறது...

வாழ்த்துகள்... மிக்க மகிழ்ச்சி...

அழகு... கவிதையும்... பிரீத்திகாவும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தங்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...

Unknown said...

இதயத்துடன் பேசும் கவிதை... இது இதயம் பேசும் கவிதை!! வாழ்த்துக்கள்!!


"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

Unknown said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

என்றும் நட்புடன்..
வைகறை
வாருங்கள்: www.nathikkarail.blogspot.com

மாய உலகம் said...

அழகு கவிதை வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

இனிய கவிதை.
வாழ்த்துக்கள்

Post a Comment