Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

ஈரம்









குளிர் கொண்ட காற்றுரச 
துளிபோடும் கார்மேகச் 
சாரல் மழை...... ஈரம் 
மண் நனை(ந்)த்த நீர் சேர்ந்து 
வழிதேடிச் சென்று சேரும் 
பள்ளமதில் வெள்ளம்.....!  ஈரம்


மலைமேலே ஊற்றெடுத்து
தனக்கான வழியமைத்து
கடல் சேரும் நதி....  ஈரம்
தொடராய் ஆர்ப்பரித்து 
அலையாய் நுரைகொண்டு
தொடும் கரை......!  ஈரம்


வலிவந்த போதும் வழியற்ற போதும்
திரளாய் கண்முட்டி கன்னம் 
வழிந்தோடும் கண்ணீர்....... ஈரம்
உவர்த்தாலும் உதவும் கரங்கொண்டு
துடைக்கும் மனிதரிடம் இருக்கும்
உள்ளம் ......! ஈரம்


உடல் வருந்த வேலை செய்து
உழைப்பால் உயர்ந்தோரின்
உடலின் வியர்வை.... ஈரம்
ஈரம்.....
நனைக்கும் புவியை
நனைக்கும் உடலை
நனைக்கும் உயிரை...
ஈரம்.....!!!









சாரல்

சாரல்
user posted image

அலையும் முகிலினங்கள்
கறுத்த தென்ன மாயம்
அகிலம் நனைய அழுகிறதே...
பாவம்!



கொஞ்சி விளையாடிய
நிலவை இழந்ததால்
வந்த சோகம் சாரலா..?

கிள்ளை போன்ற பல
வெள்ளி தொலைந்ததால்
கொண்டதிந்தச் சாரலா..?

கடல் அன்னை மீதுள்ள
அன்பைச் சொல்லும்
மொழிதான் இச் சாரலா...?

அண்டப் பெரு வெளியிருந்தும்
அலையும் நிலை தமக்கேயென
எண்ணி அழுவதே யிச் சாரலா..?

கார்முகிலைப் பெண்ணின் கூந்தலிற்கு
உவமை சொன்னதால் -முகில்கள்
கொண்ட கோபமே யிச் சாரலா..? :)

சிவனின் முடியிருந்து பாயும்
கங்கை நதி - நிலத்தில்
வீழ்வதே யிச் சாரலா...?


அலையும் முகிலினங்கள்
கறுத்த தென்ன மாயம்
அகிலம் நனைய அழுகிறதே... பாவம்!





உலகம் உயிர் பெறவே
தன்னைக் கரைக்கிறதே மேகம்..!
எம்மைக் கரைத்திங்கு
உலகிற்கேது செய்தோம்..? எனும்
எண்ணம் பிறக்கின்றதே யிச் சாரலால்...!














யாரிவள்

வெண் நிறத்தாள்
நான் மாலையில்
வீடு வர
இதள் மலர்வாள்...

காற்றோடு சேர்ந்து
நான் சுவாசிக்கும்
மூச்சினில்
நறு மணமாய்
கலந்திடுவாள்....

என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....

நான் பூஜிக்கும்
தெய்வத்தின்-காலடியில்
தவமிருப்பாள்...

இன்று -என்
கல்யாண வீட்டினில்
கழுத்தினைப் பிடித்தபடி
தொங்குகின்றாள்...

ஆம் ....

இவள்-என்
வீட்டுத் தோட்டத்தில் பூத்த
மல்லிகை!!